O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியானது (UPDATE)

O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்-GCE OL Results Will be Released Today Evening

2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 542 இணைப்பு நிலையங்களுடன் 4,989 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு, மொத்தமாக 717,246 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்ததாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • பாடசாலை பரீட்சார்த்திகள் - 433,189 பேர்
  • தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 284,057 பேர்

பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
0112784208/ 0112784537
0113188350/ 0113140314
1911

கையடக்க தொலைபேசிகளில் பெறுபேறுகளை பெற...
Exams ஒரு இடைவெளி சுட்டிலக்கம் டைப் செய்து உரிய வலையமைப்பின் அடிப்படையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Mobitel - 8884
Hutch - 8888


O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் 2.07pm

2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (27) மாலைக்குள் வெளியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, பரீட்சைப் பெறுபேறுகள் உடனடியாக பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது என அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பெறுபேறுகளை  பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிடலாம் எனவும் பாடசாலை அதிபர்களுக்கு ஒன்லைன் முறை மூலம் பெறுபேறுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கையடக்க தொலைபேசிகளில் பெறுபேறுகளை பெற...
Exams ஒரு இடைவெளி சுட்டிலக்கம் டைப் செய்து உரிய வலையமைப்பின் அடிப்படையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Mobitel - 8884
Hutch - 8888


Add new comment

Or log in with...