வலையில் சிக்குண்ட சிறுத்தையை மீட்க ஏற்பாடு

வேட்டையாடுவதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட சிறுத்தையொன்றை மீட்க பொலிஸாரும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்

ஹட்டன், டிக்கோயா எட்லி  தோட்ட தேயிலை மலை பகுதியில் இன்று  (24)  பகல் சிறுத்தையொன்று வலையில் சிக்குண்டுள்ளது.

இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, மிருக வைத்தியரின் உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க ஊசியேற்றி மயக்கமடைய செய்து உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  - எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...