மீன் பிடிக்க சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி பலி | தினகரன்

மீன் பிடிக்க சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி பலி

மீன் பிடிக்க சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி பலி-Drown to Death-Horowpothana

குறித்த சம்பவம் ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் வலஹவித்தவெவ பகுதியில் இன்றிரவு (23) ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதான லத்தீப் ரஹ்மத்துல்லா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது கரடிக்குளம் குளத்துக்கு மீன் பிடிக்க சென்ற நான்கு பேரில் ஒருவரே நீரில் மூழ்கியதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவபத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்) 


Add new comment

Or log in with...