போட்டி சமதளத்திலான போட்டியாக அமைய வேண்டும்

போட்டி சமதளத்திலான போட்டியாக அமைய வேண்டும்-General Election-Mahinda Deshapriya Facebook Post

- தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உரியது
- தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்க முடியாது

தேர்தல் தினத்தை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உரியது எனவும், தேர்தலை நாடாத்துவதோ பிற்போடுவதோ குறித்து ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ள, மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவின் தமிழாக்கம்

இன்று 2020, ஏப்ரல் 20 கூட்டத்தில் தேர்தல் தினத்தை தீர்மானிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு என்ன செய்யப் போகின்றது என, அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எமது நண்பர்கள் என்னிடம் கேட்கின்றார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்து தொடரில் என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் அது மூன்றுபேரை கொண்டதாகும். அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பேசவேண்டிய விடயங்கள், குறிப்பாக விவாதத்திற்கு எடுத்துச் செல்லுகின்ற அல்லது சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற விடயங்கள் குறித்து ஆணைக்குழுவில் கலந்தாலோசிப்பதற்கு முன்னர், அது தொடர்பில் ஊடகங்கள் ஊடாக வெளியிடுவது என்னாலோ அல்லது ஆணைக்குழுவினால் பின்பற்றக்கூடிய செயற்பாடு அல்ல என்பதனால், நான் கொண்டுள்ள அபிப்பிராயத்தை என்னால் தற்பொழுது தெரிவிக்க முடியாது.

எவ்வாறாயினும் தற்போது நிலவுகின்ற சூழ்நிலை மற்றும் ஏனைய விடயங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு அனைத்து மாற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் தேர்தல் ஆணைக்குழு கலந்தாலோசிக்கும்.

ஒத்தி வைக்கப்பட்டுள்ள தேர்தலை நடாத்துவது தொடர்பான தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உண்டு. அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களின் ஊடாக வெளியிடப்பட்ட போதிலும், அத்திட்டத்தை தீர்மானிப்பது தொடர்பில் அதாவது பிற்போடுவது அல்லது உடனடியாக நடாத்துவது தொடர்பில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்ட போதிலும், அவை அனைத்தின் மூலமும் தேர்தலை பிற்போடுவது அல்லது நடாத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்களை பிரயோகிக முடியாது என்பதோடு, எம்முடன் தொடர்பாடலில் ஈடுபடும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாட்டின் நிலைமை, குறிப்பாக தொற்றுநோய் காரணமாகவும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பிக்கையான வாக்கெடுப்பை நடாத்துவதற்கு ஏற்ற நிலைமையை ஏற்படுத்துவது தொடர்பிலும், போட்டியானது சமதளத்திலான போட்டியாக இடம்பெற வேண்டும் என்பதையும் நாம் இதன்போது ஆராய்வோம்.

COVID 19 வைரஸின் அச்சுறுத்தல் மற்றும் அதன் கட்டுப்பாடு தொடர்பிலும் அரச இயந்திரத்தை செயற்படுத்துவது தொடர்பிலும் உரிய துறைசார்ந்த நிபுணர்கள் மற்றும் உரிய அதிகாரத்தை கொண்ட அரசு அதிகாரிகளின் கருத்துகள் மற்றும் எமது அதிகாரிகளின் கருத்துகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆராயும்.

இதன் மூலம் மிகவும் உகந்த முடிவை எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நான் 1983 ஆம் ஆண்டு தேர்தல்கள் திணைக்களத்தில் இணைந்த நாள் முதல் இதுவரை எந்த ஒரு அரசியல்வாதிக்கோ, கட்சிக்கோ, குழுவினருக்கோ விசேடமான பக்கச்சார்பாக நடந்ததில்லை. எதிர்வரும் காலத்தில் அவ்வாறு நடக்கப் போவதில்லை.

எனது பக்கச்சார்பானது, அரசியல் அமைப்பின், ஜனநாயகத்திற்கும், பொதுமக்களுக்குமானதாகும்.

அதன் முடிவில் எனது பக்கச்சார்பு பொது மக்களுக்கும் பொது மக்களுக்கு மட்டுமானதாகும், மக்களுக்கு மட்டுமானதாகும்.

COVID 19  இற்கு தோல்வி !!!
பொதுமக்களுக்கு ஜனநாயகம் !!!


Add new comment

Or log in with...