புதுவருட பிறப்புடன் புத்தகங்களை எழுத ஆரம்பிக்குமாறு அழைப்பு | தினகரன்


புதுவருட பிறப்புடன் புத்தகங்களை எழுத ஆரம்பிக்குமாறு அழைப்பு

புதுவருட பிறப்புடன் புத்தகங்களை எழுத ஆரம்பிக்குமாறு அழைப்பு-Starts to Write a Book on Auspicious Time-Dullas Alahapperuma

நாடு முழுவதும் உள்ள 10,000 இற்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்காக 'எழுதுகின்ற விடுமுறையில் - நாட்டுக்கு பெறுமதியான நூல் ஒன்று' எனும் நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெருமவின் எண்ணக்கருவில், தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அன்புள்ள மாணவ, மாணவிகளுக்கு, ஒரு புதிய ஆண்டின் விடியல் என்பது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பின் விடியல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் மிக முக்கியமான கலாச்சார மரபுகளில் ஒன்று, புனித காலங்களை கடைபிடிப்பது. அவற்றில், நல்ல நேரத்திற்கு ஏற்ப வேலையைத் தொடங்குவது, மாணவர்களுக்கு மிகவும் முக்கியம், எந்தவொரு, மொழி மதம், கலாச்சார, பிரிவினையும் இல்லாமல், நல்ல செயல்களை நினைவுகூருவதே மனிதகுலத்தின் அவசியம்.

இதுபோன்ற உன்னதமான மனித குணத்தின் தேவை, முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் தருணம் இது.

இலங்கை மண்ணின் அனைத்து பாடசாலை மாணவர்களையும், நாட்டுக்கு பெறுமதியான புத்தகத்தை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். இந்த புத்தாண்டின் போது, உன்னதமான நேரத்தில், ஒரு உன்னத விருப்பத்தை மனதில் கொண்டு, பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன், இந்த புத்தகத்தை எழுதத் தொடங்க வேண்டும் என்று ஒரு தந்தையாக நான் இந்த அன்பான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.

அன்புக்குரிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குழந்தைகளே, இன்று (13) இரவு 10.43 மணிக்கு, மலரும் இந்த புத்தாண்டின் போது, எங்கள் தாய்நாட்டை அமைதியுடனும் செழிப்புடனும் ஒரு அழகான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் பொருட்டு, 'நாட்டின் பெறுமதியான உங்களின், பெறுமதியான கதையை, பெறுமதியான புத்தகமாக மாற்றுவதற்கு, உங்கள் பேனா அல்லது பென்சிலைப் பிடித்து எழுத ஆரம்பித்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியமான, எதிர்காலத்திற்காக, உங்கள் தாய்நாடு அயராது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்த தருணத்தில் நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த வாய்ப்பை இழந்து விடாதீர்கள். நாளை பூக்கும் பத்தாயிரம் மாணவ புத்தகங்களுடன் முழு நாட்டிற்கும், அதன் நறுமணத்தை பரப்புங்கள். உங்கள் அழகான செய்தியை உலகம் முழுவதற்கும் வழங்குவோம் .

தவற விடாதீர்கள் . . . வைிடாது பிடிப்போம்... வரையும், எழுதும் வேலைகளுடன் இந்த புத்தாண்டை தொடங்குவோம்.


Add new comment

Or log in with...