கொழும்பு மாநகர எல்லைக்குள் மருந்து கொள்வனவுக்கு மாற்று வழி

கொழும்பு மாநகர எல்லைக்குள் மருந்து கொள்வனவுக்கு மாற்று வழி-Medicine-Pharmacy Contact Details of Colombo Municipal Area

புத்தாண்டை அடுத்து, ஏப்ரல் 15 முதல் நடைமுறை

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் மருந்துகளை கொள்வனவு செய்ய மாநகர சபையின் மாநகர ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷினி திஸாநாயக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலுமுள்ள மருந்தகங்களை ஏப்ரல் 09 முதல், காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திறக்க, அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணி ஏற்கனவே முடிவு செய்துள்ள போதிலும், இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் மாற்று வழிகள் மூலமாகவே மருந்துகளை கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தில், இது தொடர்பிலான மாற்று நடவடிக்கையாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தாண்டை அடுத்து, எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு மாநகர எல்லைப் பகுதியில் வாழும் பொதுமக்கள் தமது ஆங்கில மருந்து வகைகளை, தமக்குரிய மருந்துச்சீட்டை, தமது ஆளடையாளத்தை உறுதி செய்வதற்னாள தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் உரிய ஆங்கில மருந்தகத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்போது ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக, குறித்த மருந்துச் சீட்டை பயன்படுத்த முடியும் என, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

இதேவேளை, மருதானையின் சுதுவெல்ல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் தொடர்பில் மூடப்பட்டுள்ள பிரதேசத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான மருந்து வகைகளை சுதுவெல்ல நகர மருந்தகம் மூலம் விநியோகிக்க, சுகாதார சேவைகள் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மருந்துகள், இம்மாதம் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசங்களும் மருந்துகளை கொள்வனவு செய்யும் மருந்தகங்களும்

பிரதேசங்கள் மருந்தகங்களின் முகவரி

அளுத் மாவத்தை

268/2,  எச்‌. ஜியோ பெரேரா மாவத்தை, கொழும்பு 15

பொரளை தெற்கு

136, கலாநிதி என்‌.எம்.‌ பெரேரா மாவத்தை, கொழும்பு 08

கெம்பல்‌ பிளேஸ்‌/ மருதானை

225, ஶ்ரீ தம்ம மாவத்தை, கொழும்பு 10

எல்விட்டிகல மாவத்தை

12, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு -08

போபஸ்‌ லேன்

41, ஆர்னோல்ட்‌ ரத்நாயக்க மாவத்தை, கொழும்பு 10

கிராண்டபாஸ்‌ தெற்கு

65, கலாநிதி டெனிஸ்டர்‌ டி சில்வா மாவத்தை, கொழும்பு 09

கென்ட்‌ வீதி

80, கென்ட்‌ வீதி, கொழும்பு 09

கிருலப்பனை

05, ரொபட்‌ குணவர்தன மாவத்தை, கொழும்பு 06

கொள்ளுப்பிட்டி

72, ஶ்ரீ தர்ம கீர்த்தியாராம மாவத்தை, கொழும்பு 03

கொட்டாஞ்சேனை

175, ஜோர்ஜ்‌ ஆர்‌ டி சில்வா மாவத்தை, கொழும்பு 13

மாதம்பிட்டிய

223, மாதம்பிட்டிய வீதி, கொழும்பு 15

மாளிகாவத்தை மேற்கு

341/12, சாவியா பள்ளி வாசல்‌ வீதி, கொழும்பு 10

மட்டக்குளி

147, மட்டக்குளி பார்ம்‌ வீதி, கொழும்பு 15

முகத்துவாரம்‌ வடக்கு

30, ஹியுபட்‌ பிளேஸ்‌, கொழும்பு  15

முகத்துவாரம்‌ தெற்கு

05, புனித‌ சந்தியாகோ மாவத்தை, கொழும்பு 15

நாரேஹன்பிட்டி

22, முகாந்திரம்‌ தபாரே‌ மாவத்தை, கொழும்பு 05

நியு பஸார்

200, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 14

பஞ்சிகாவத்தை

132, பஞ்சிகாவத்தை வீதி, கொழும்பு 10

கொம்பனித் தெரு

104, சேர்‌ ஜேம்ஸ்‌ பீரிஸ்‌ மாவத்தை, கொழும்பு 02

சென் போல்‌

27, விவேகானந்த மேடு, கொழும்பு 13

சென்‌ செபஸ்தியன்

168/1, மிஹிந்து மாவத்தை, கொழும்பு 12

திம்பிரிகஸ்ஸாய

75, கிருள வீதி, கொழும்பு 05

வஜிர வீதி

26, வஜிர வீதி, கொழும்பு 05

வனாத்தமுல்ல

80, பெலன்‌ கஸ்துடுவ வீதி, கொழும்பு 08

வெள்ளவத்தை

40, மெனிங்‌ வீதி, கொழும்பு 06

 


Add new comment

Or log in with...