பல்கலை ஆரம்பிக்கும் திகதி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்
பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மே 11ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 13 முதல் ஏப்ரல் 19 வரை முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டதோடு, பாடசாலை இரண்டாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க கல்வியமைச்சினால் திட்டமிடப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதனால் பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில், இவ்வாறு மீண்டும் பாடசாலைகளை திறக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை நடத்தப்படாத இக்காலத்தில், மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் தொலைதூர வசதி மூலமான கல்வி நடவடிக்கைகளை வழங்க அரசாங்கம் அதிக திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் முடிவு எடுக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment