மின் கட்டணம் செலுத்த ஏப்ரல் 30 வரை கால அவகாசம் | தினகரன்

மின் கட்டணம் செலுத்த ஏப்ரல் 30 வரை கால அவகாசம்

நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மின்சாரப் பட்டியல் கட்டணம் மற்றும் நிலுவைகளை செலுத்துவதற்கு ஏப்ரல் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, மின்சார பாவனையாளர்கள் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இவ்வாறு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், எக்காரணம் கொண்டும், மின்துண்டிக்கப்படமாட்டாது எனவும், அது தொடர்பில் மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...