ICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்

கொரோனா வைரஸ் தொற்றினால் ICU இல்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு (55) கொரோனா வைரஸ் பரவியது கடந்த மார்ச் மாதம் உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் இம்மாதம் 06ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறு நாளே பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் உடல்நிலை மோசமடைந்தது.

இதனால் சாதாரண வார்டில் இருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், அவசர  சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதனை அடுத்து, நல்ல உடல்நிலையில் உள்ள பொரிஸ் ஜோன்ஸன், இன்று அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்  சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாலும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. 

 


Add new comment

Or log in with...