அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளர் தெரிவிலிருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகல்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகியுள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும், செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதுவரை நடைபெற்ற தேர்தல்கள் முடிவில் பெர்னி சாண்டர்ஸ் ஏழு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.

ஆனால் பிடன் 19 இடங்களில் வெற்றி பெற்றார். இதனால் தனது பரப்புரையை இரத்து செய்த பெர்னி சாண்டர்ஸ், ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கும்- ஜோ பிடனுக்கும் போட்டி உறுதியாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...