உலகை உலுக்கிய உயிர் கொல்லி நோய்கள்!

உலகில் பல பகுதிகளிலும் கொள்ளை நோயாக உருவெடுக்கம் நோய் பென்டமிக் எனப்படும். தற்பொழுது உலகளவில் பரவிவரும் கோவிட்-19 என்கிற கொரோனா தொற்று பாரியளவில் உயிர்பலியை ஏற்படுத்தியுள்ளது.இதனை உலக சுகாதார நிறுவனம் உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது. இந்த தொற்று எனும் பதத்தை தற்பொழுது உலக சுகாதார நிறுவனம் மாறுபட்ட பொருளிலே பயன்படுத்துகிறது.

கொள்ளை நோயொன்று தொற்று நோயாக இருந்து அந்த நோயானாது விரைவாக பரவுவதால் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கோ அல்லது ஒரு கண்டத்தில் இருந்து இன்னொரு கண்டத்திற்கோ பரவி பெரிய அளவு மக்களை தாக்கி அழிக்கக்கூடியதாகும். இது சில வேளை உலகம் முழுவதும் கூட தன் தாக்கத்தினை ஏற்படுத்தி, அதிக உயிர் பலிகளை உண்டு பண்ணவும் வாய்ப்புகள் உண்டு.

இவ்வாறு உலகம் முழுவதும் பரவிய பென்டமிக் நோய்த்தொற்றுகளுக்கு உதாரணங்களாக பெரியம்மை, இது இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டு முன்னூறு தொடக்கம் ஐந்நூறு மில்லியன்  மக்களை காவு கொண்டுள்ளது, அடுத்து காசநோய்  இது மைக்ரோ பட்ரீயா எனும் நுண் கோலுயிரின் தாக்குதலால் மாந்தர்களுக்கு ஏற்படும் கடுமையான தொற்றுநோயாகும். இது என்புருக்கி நோய் என்றும் அழைக்கப்படும். அடுத்தாக எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ், இதுவும் பண்டமிக் வகைகளில் ஒன்று, முதன் முதலில் ஆபிரிக்காவில் தோன்றி ஹைட்டின் தீவின் வழியாக அமெரிக்காவிற்கு பரவியது. இவ்வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பைக் கொண்ட வைரஸ்,பக்ட்ரீயா, புரோட்டோசோவா மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகின்றது என உறுதிப்படுத்தப்பட்டால் அந்நோய் தொற்றுநோய்க்குள் அடங்கும். கொவிட்-19 என்கிற வைரஸும் அவ்வாறே பெருந்தொற்று நோய் என வர்ணிக்கப்படுகின்றது.

இந்நோய்த் தொற்றானது வெவ்வேறு வழிமுறைகளில் கடத்துப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன அவையாவன நேரடி தொடுகை, காற்றின் வழியாக,நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்கு உட்படும் பொருட்களினால் என்பனவாகும்.

நோய்கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு நோயை உருவாக்கும் உயிரினம், நோயின் இயல்பு, நோய் கடத்தப்படும் முறை என்பனவற்றை அறிந்து செயற்படுதல் மிக உன்னதமான செயற்பாடாகும்.

கி.மு 540- −750 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட ப்ளங் ஒப் ஜஸ்டினியன் எனப்படும் ஒரு வகை தொற்று நோய் ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையில் ஐம்பது தொடக்கம் அறுபது வீத மக்களின் இறப்புக்கு காரணமாக இருந்துள்ளது.

அதேபோல 1342 தொடக்கம் 1352 வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட வேறொரு வகை பிளேக் நோயினால் ஐரோப்பிய, ஆசிய, ஆபிரிக்க மக்கள் சனத்தொகையில் 25 தொடக்கம் 50 வீதமான மக்கள் இறந்து உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்துள்ளது. ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-−60 வீதமான 25 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள். இந்த காலகட்டத்தை ஐரோப்பாவில் கறுப்பு இறப்பு காலம் என பலராலும் வர்ணிக்கப்பட்டது.

1556 ஆம் ஆண்டு தொடக்கம் 1560 ஆண்டுகள் வரை ஐரோப்பாவில் முதன்முதலில் அறிமுகமான இன்புளுவன்சா எனப்படும் ஒரு வகை காய்ச்சல் தொற்றுநோயால் இருபது வீதமான மக்கள் உயிரிழந்தனர். அ தேபோல அண்மையில் 2009 ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் எனும் ஒரு வகையான காய்ச்சல் உண்டாகி உலக மக்கள் மத்தியில் வேகமாக பரவிவந்தது. அத்தோடு பல ஆயிரம் கணக்கில் மக்கள் உயிரையும் குடித்துள்ளது எனலாம். இவ்வாறு வருடந்தோறும் ஏதாவது ஒரு பெருந் தொற்று நோய் உலக மக்களை பீடித்து அனைவருக்கும் பரவி ஆட்டம் காண வைப்பதோடு பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் மாய்க்கின்றது என்பது மறுக்கமுடியாத,மறக்க முடியாத உண்மையாகும். 

உலக சுகாதார அமைப்பின் உத்தியோகப்பூர்வ அறிக்கையின்படி உலக மக்கள் தொகை இறப்பில் இருபத்தைந்து வீதமானோர் தொற்றுநோய் தாக்கத்தால் உயிரிழக்கின்றனர் எனவும், இவற்றில் 90 வீதமானோர் இரைப்பை, நுரையீரல் அலற்சி அல்லது நியுமோனியா போன்ற சுவாசத்தொடர்பான நோயினால் பாதிப்படைகின்றனர் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேத மூலிகைகள் முலம் இந்த கொரோனா தொற்றை முழுமையாக குணப்படுத்தலாம் என பலரும் குறிப்பிடுகின்றனர். இதில் சிலர் அழுத்தமாக நம்பிக்கை கொண்டிருந்தாலும் மரபு மருத்துவம் இந்த வைரஸ் தொற்றுக்கு எவ்வளவு உதவும் என்பதில் சந்தேகம் உண்டு என்றே கூற வேண்டும்.ஆயினும் இதனை விட சமூக தொலைவு, சுவாச சுகாதாரம் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயற்பாடுகள் அதிக பலனைத்தரும் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு ஒவ்வொருவரும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்ற காலத்தை சரிவர கையாண்டு புத்திக்கூர்மையுடன் செயற்பட்டால் கொரோனாவை எமது நாட்டிலிருந்து முழுமையாக விரட்டியடிக்கலாம்.

ஜயகுமார் ஷான், மொனறாகலை


Add new comment

Or log in with...