Friday, April 10, 2020 - 10:10pm
பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே எடுக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மேலும் தாமதமடையலாம் என அமைச்சின் செயலாளர் என். எச். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமையவே இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
Add new comment