சீனாவிலிருந்து 20 ஆயிரம் பரிசோதனைக் கருவி தொகுதி அன்பளிப்பு

சீனாவிலிருந்து 20 ஆயிரம் பரிசோதனைக் கருவி தொகுதி அன்பளிப்பு-China's Alibaba Donates Coronavirus Test Kits to Sri Lanka

-  130,000 ஆயிரம் டொலர் பெறுமதி
- புகழ் பெற்ற இணைய வர்த்தக நிறுவனம் அலிபாபா நிறுவுனரால் வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சோதனை செய்யும், 20,064 பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கின் மூலம் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த பரிசோதனை கருவித் தொகுதிகள், சர்வதேச இணைய வழி வர்த்தக நிறுவனமான, அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜெக் மா'வினால் (Jack Ma) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தொகுதியின் பெறுமதி, ஒரு இலட்சத்து 30 ஆயிரம் டொலர் ($130,000) என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) இரவு MU231 எனும் விமானம் மூலம் ஷங்காய் நகரிலிருந்து இத்தொகுதி இலங்கையை வந்தடையும் என சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...