இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; வயோதிபர் மரணம் | தினகரன்


இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; வயோதிபர் மரணம்

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; வயோதிபர் மரணம்-Accident-67 Yr Old Dead-Kantale-Trincomalee

மற்றுமொருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (06) பிற்பகல் திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம், ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் (67) எனவும் தெரியவருகின்றது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது  பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த  வயோதிபர்  குறுக்கே திரும்ப முற்பட்டபோது பின்புறமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் விபத்தில் படுகாயமடைந்து வயோதிபரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும்  மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் (07) பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - எம்.எஸ். அப்துல் ஹலீம்)


Add new comment

Or log in with...