கொவிட் 19 நிதியத்திற்கு மேலும் ரூ. 6.6 கோடி நிதி; மொத்தம் ரூ. 38 கோடி | தினகரன்

கொவிட் 19 நிதியத்திற்கு மேலும் ரூ. 6.6 கோடி நிதி; மொத்தம் ரூ. 38 கோடி

கொவிட் 19 நிதியத்திற்கு மேலும் ரூ. 6.6 கோடி நிதி; மொத்தம் ரூ. 38 கோடி-Rs 66 million More-COVID19 Healthcare Social Security Fund Increased Up to Rs380 Million

  • அமைச்சர் டலஸ் அளகப்பெரும - ரூ. 8 மில்லியன்
  • அமைச்சர் காமினி லொக்குகே - ரூ. 10 மில்லியன்
  • தேசிய லொத்தர சபை - ரூ. 25 மில்லியன்
  • தேசிய சேமிப்பு வங்கி - ரூ. 2.5 மில்லியன்
  • இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் - ரூ. 2.5 மில்லியன்
  • காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு - ரூ. 2 மில்லியன்
  • மெலிபன் பிஸ்கட் நிறுவனம் - ரூ. 10 மில்லியன்
  • மாத்தறை பௌத்த பாதுகாப்பு சபை - ரூ. 1 மில்லியன்
  • நேச்சர்ஸ் பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் - ரூ. 5 மில்லியன்

கடந்த இரு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு ரூபா 66 மில்லியன் அன்பளிப்பு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ரூபா 314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது ரூபா 380 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சரவை அமைச்சு பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அன்பளிப்பு செய்தனர்.

அத்துடன், தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாவையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன் ரூபாவும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு 02 மில்லியன் ரூபாவையும், மெலிபன் பிஸ்கட் மெனுபெக்சரீஸ் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவையும், மாத்தறை பௌத்த பாதுகாப்பு சபை ஒரு மில்லியன் ரூபாவையும் நேச்சர்ஸ் பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...