இலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது-4th COVID19 Patient Passed Away-58 Yr Old Male

- 58 வயதான நபர்; IDH இல் மரணம்
- உலக அளவில் மரணித்தோர் 50 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.

இன்று (02) இரவு 9.30 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த நபர் நியூமோனியா காய்ச்சல் நிலை உக்கிரமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமான மரணம் 50,230 ஆக பதிவாகியுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை (981,221) நெருங்கியுள்ளது.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றின் காரணமான மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது.

60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.

இரண்டாவது மரணம் கடந்த திங்கட்கிழமை (30) மொஹமட் ஜமால் எனும் நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார். இவர் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (01) 3ஆவது மரணம் பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஒருவர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார். இவரும் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.

இதேவேளை மார்ச் 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் 4 பேரும் என இலங்கையர் 07 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 151 ஆகும்.

அதற்கமைய, இன்றையதினம் (02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை எவரும் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்படவில்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 151 பேரில் தற்போது 126 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 04 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 251 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 151
குணமடைவு - 21

சிகிச்சையில் - 126
மரணம் - 04

மரணமடைந்தவர்கள் (07)
இலங்கையில் - 04
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 21
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 151
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...