மேலும்3 பேர் குணமடைவு; 21 பேர் வீடு திரும்பியுள்ளனர் | தினகரன்

மேலும்3 பேர் குணமடைவு; 21 பேர் வீடு திரும்பியுள்ளனர்

மேலும்3 பேர் குணமடைவு; 21 பேர் வீடு திரும்பியுள்ளனர்-3 More COVID19 Patients Recovered and Discharged

146 பேர் இது வரை அடையாளம்; 123 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (01) பிற்பகல் 5.00 மணிக்கு தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 143 இலிருந்து 146 ஆக அதிகரித்திருந்தது.

இன்றையதினம் (01) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் இது வரை குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 146 பேரில் தற்போது 123 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 146
குணமடைவு - 21

சிகிச்சையில் - 126
மரணம் - 02

மரணமடைந்தவர்கள் (05)
இலங்கையில் - 02
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 21
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 146
ஏப்ரல் 01 - 03 பேர் (146)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...