மட்டக்களப்பு சிறைச்சாலையில் 19 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு | தினகரன்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 19 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 சிறைக்கைதிகள் இன்று (01) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியடசகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்.

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைச்சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தார் அதனைத் தொடர்ந்து  நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்த சிறைக்கதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை, பொத்துவில், மட்க்களப்பு, ஏறாவூர் ஆகிய நீதிமன்றங்களின் அனுமதிக்கு அமைவாக இன்று 19 சிறைக்கைதிகள்  இரண்டாம் கட்டமாக பிணையில் விடுவிகப்பட்டுள்ளனர். 

அதேவேளை கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்த  162 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(உதயகுமார் உதயகாந்த் - கல்லடி குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...