ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு; மருத்துவ அறிக்கை கோரப்படுவர்

ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு; மருத்துவ அறிக்கை கோரப்படுவர்உத்தரவு-All those Arrested Without Accepted ID During Curfew

ஊரடங்கு வேளையின் போது, உரிய சேவை அடையாள அட்டை மற்றும் அனுமதி பெற்றவர்களைத் தவிர ஏனையோர் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டவர்கள் மற்றும் வாகனங்கள் தவிர்ந்த, வீதிகள், தெருக்களில் பயணிக்கும் அனைவரும் பிடியாணை உத்தரவின்றி கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

அத்துடன், அவசியம் ஏற்படும் நிலையில் அவர்களை பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது சட்ட வைத்திய அதிகாரிகளிடம் அறிக்கைகளை பெறுவதற்காக முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்கள் பயணித்த வாகனங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, கொரோனா தொற்றுநோய் நிலைமை குறைவடையும் வரை தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...