ஊரடங்கை மீறி கைதானோர் 7,619ஆக அதிகரிப்பு | தினகரன்


ஊரடங்கை மீறி கைதானோர் 7,619ஆக அதிகரிப்பு

இன்று  (31) காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி  வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 96 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த 20ஆம் திகதி முதல் நாட்டில் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டு வரும் நிலையிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

இதற்கமைய கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7,619 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,864 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...