மனித குலத்துக்கான அச்சுறுத்தலை அனைவரும் புரிந்து கொள்வோம்! | தினகரன்

மனித குலத்துக்கான அச்சுறுத்தலை அனைவரும் புரிந்து கொள்வோம்!

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்ற பொலிஸ் ஊரடங்கு உத்தரவூ ஏற்கனவே எதிர்பார்த்தபடி மிகுந்த பலனை அளித்திருக்கிறது. பொதுமக்கள் வெளியே ஒன்றுகூடுவதைத் தவிர்த்து அவர்களை வீட்டுக்குள்ளேயே சில நாட்களுக்கு முடக்கி வைப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவூவதை கட்டுப்படுத்த முடியூமென்பது எமது நாட்டில் நிஷரூபிக்கப்பட்டுள்ளது.

எமது அயல் நாடான இந்தியாவூம் இதே விதமான நடவடிக்கையையே கையாண்டு வருகின்றது. வீட்டுக்குள் மக்களை முடக்கி வைப்பதற்கான அந்த ஊரடங்கு சட்டத்தை ‘லொக் டவூன்’ உத்தரவூ என்று இந்தியாவில் குறிப்பிடுகின்றார்கள். இந்தியாவில் கடந்த புதன்கிழமையில் இருந்து ஆரம்பமாகி தொடர்ச்சியாக 21 தினங்களுக்கு ‘லொக் டவூன்’ உத்தரவூ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா என்பது மாபெரும் தேசம் ஆகும். மக்கள் தொகையூம் அங்கு அதிகம். அங்குள்ள முக்கிய நகரங்களில் மக்கள் மிகவூம் நெருக்கமாக வசிக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அடிப்படை வசதிகளற்ற நிலைமையில் வாழ்கின்றார்கள். அவ்வாறான பிரதேசங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவத் தொடங்குமானால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடக் கூடும் .

எனவேதான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் நோக்கம் கொண்ட அபத்தமான எதிர் விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தாமல்இ மக்களை முதலில் வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்யூம் வகையில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தியூள்ளார்.

ஆளுமை நிறைந்த எந்தவொரு அரசியல் தலைவரும் இவ்வாறுதான் முடிவூகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையேல் நாட்டுக்கே பாதிப்பு ஏற்பட்டு விடும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கையூம் இவ்வாறான ஒன்றுதான். ஆனாலும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய சுயமாக முடிவூ மேற்கொண்டதாக கூற முடியாது. மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மற்றும் நாட்டின் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்த பின்னரே ஜனாதிபதி இவ்வாறான முடிவொன்றுக்கு வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவூவதை வெற்றி கொண்டதில் உலகுக்கே முன்னுதாரணமான நாடாக சீனா விளங்குகின்றது. கொரோனா தொற்று தீவிரமாக பரவிய வூஹான் பிரதேசத்தை முற்றாக முடக்கி வைத்ததன் மூலமே கொரோனா சவாலை முறியடித்து சீனா. கொரோனாவை கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் அனைத்து நாடுகளுமே சீனாவின் வழிமுறையை பின்பற்ற வேண்டிய நிலைமைக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கின்றன.

அதேசமயம்இ கொரோனா விடயத்தில் இத்தாலி மக்கள் மிகுந்த அலட்சியமாக இருந்து விட்டதனால் அந்நாடு பெருமளவூ உயிர்ப் பலிகளை சந்தித்திருக்கிறது. மக்களை வெளியே நடமாடுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறு இத்தாலி அரசாங்கம் ஏற்கனவே பலதடவை வலியூறுத்திக் கூறியிருந்த போதிலும்இ அந்நாட்டு மக்கள் அதனை பொருட்படுத்தத் தவறி விட்டனர்.

வணக்கத் தலங்களில் அவர்கள் வழமை போல ஒன்றுகூடினர். களியாட்ட விடுதிகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் ஒன்று திரண்டனர். இவ்வாறான அலட்சியம் காரணமாக அந்நாட்டில் மக்கள் மத்தியில் மிக இலகுவாகவூம்இ வேகமாகவூம் கொரோனா பரவியிருக்கிறது. உதாசீனத்தின் பரிதாப விளைவை இத்தாலி மாத்திரமன்றிஇ ஐரோப்பாவின் மேலும் சில நாடுகள் இப்போது அனுபவிக்க வேண்டியூள்ளது.

இத்தாலியில் ஏற்பட்டது போன்றதொரு நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறுதியான நிலைப்பாடாகும். மக்களை பல நாட்கள் வீடுகளுக்குள் முடக்கி வைப்பது மட்டுமே கொரோனா வைரஸ் பரவூவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே நடவடிக்கை என்பதை உணர்ந்து கொண்டதன் பேரிலான நடவடிக்கையே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஊரடங்கு உத்தரவூ ஆகும்.

எந்தவொரு நாட்டிலும் இவ்வாறாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவூ நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேளையில் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் விடப் போவதில்லை. குடும்ப பொருளாதாரம் முடங்கிப் போகின்றது. சிறிய கூலித் தொழில் புரிவோர் தொடக்கம் பெரும் தொழிலில் ஈடுபடுகின்ற செல்வந்தர் வரை அனைவருக்குமே வருமானம் இழக்கப்படுகின்றது. அதேசமயம் அரசாங்கத்துக்கு ஏற்படுகின்ற தேசிய வருமான இழப்பு கணிப்பிட முடியாதது.

வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்ற மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியமும்இ மனஅழுத்தமும் அதிகம். ஆனாலும் இன்றைய கொரோனா அச்சுறுத்தல் வேளையில் பொறுப்புள்ள அரசாங்கமொன்று மக்களின் உயிர்ப் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்க வேண்டியிருக்கின்றது. உயிர் வாழ்க்கைக்கான போராட்டம் இதுவென்பதை எவருமே மறந்து விடலாகாது. உலகில் மனித இருப்புக்கு எதிராக தோன்றியிருக்கும் இச்சவால் எவ்வாறாயினும் முறியடிக்கப்பட வேண்டியதாகும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்கஇ ஊரடங்கு உத்தரவூ தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன போதிலும் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தியாவசிய உணவூப் பொருட்கள்இ மருந்துகள்இ அன்றாட பாவனைப் பொருட்கள் போன்றவையெல்லாம் மக்களுக்கு கிடைக்கும்படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் வழமை போன்று தங்களது தொழிலை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.

இன்று தோன்றியூள்ள நெருக்கடி தற்காலிகமானதாகும். கொரோனாவை மனித குலம் வெற்றி கொண்டு விடுமென்பதில் ஐயமில்லை. அதுவரை அனைவரும் அர்ப்பணிப்புடன் பொறுமை காப்பது அவசியம்.

 


Add new comment

Or log in with...