ஓட்டமாவடியில் பட்டதாரிகளின் கொடுப்பனவுக்கான விபரம் சேகரிப்பு | தினகரன்

ஓட்டமாவடியில் பட்டதாரிகளின் கொடுப்பனவுக்கான விபரம் சேகரிப்பு

ஓட்டமாவடியில் பட்டதாரிகளின் கொடுப்பனவுக்கான விபரம் சேகரிப்பு-Details of Graduates in Oddamavadi Collected for Payment

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை உள்வாங்கி மாதாந்த சம்பளம் வழங்கும் வகையில் விபரங்கள் சேகரிக்கும் பணி பிரதேச செயலகத்தில் இன்று (28) இடம்பெற்றது.

ஓட்டமாவடியில் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவுக்கு உள்ளீர்ப்பு-Details of Graduates in Oddamavadi Collected for Payment

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அப்கர், கணக்காளர் எம்ஐ.எஸ். சஜ்சாத் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடியில் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவுக்கு உள்ளீர்ப்பு-Details of Graduates in Oddamavadi Collected for Payment

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 49 பட்டாதாரிகளை ஓட்டமாவடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் திங்கட்கிழமை முதல் இணைத்துக் கொள்ளப்பட்டவுள்ளனர்.

ஓட்டமாவடியில் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவுக்கு உள்ளீர்ப்பு-Details of Graduates in Oddamavadi Collected for Payment

அத்தோடு இவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவான இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்

Add new comment

Or log in with...