பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனுக்கு கொரோனா தொற்று!

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் அறிவித்துள்ள பொரிஸ் ஜோன்சன், தனக்கு கடந்த 24 மணித்தியாலங்களாக கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டதாகவும், தற்போது அது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான நடவடிக்கைகளை வீடியோ தொடர்பாடல் மூலம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்த வைரஸை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 


Add new comment

Or log in with...