WhatsApp, Viber, imo மூலம் வீட்டிற்கே மருந்து

WhatsApp, Viber, imo மூலம் வீட்டிற்கே மருந்து-Get Your Medicine Delivered to Your Doorstep

அருகிலுள்ள மருந்தகத்தை அறிய: bit.ly/slpharm

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு வேளையில், மக்கள் தமக்குத் தேவையான மருந்துகளை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுத்து அனுப்பவும்
அதற்கமைய, தாம் பயன்படுத்தும் மருந்துகளின் பெயர் சிட்டைகளை புகைப்படம் எடுத்து, WhatsApp, Viber, Imo ஆகிய செயலிகள் (app) ஊடாக தமது கையடக்க தொலைபேசி மூலம் அனுப்பி வைப்பதன் மூலம் அதனை வீட்டிற்கே கொண்டு வரும் முறையொன்றை அரசாங்க சுகாதார சேவைகள் திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.

மருந்தகங்களின் பட்டியல்
அதற்கமைய, www.health.gov.lk அல்லது bit.ly/slpharm எனும் தளத்திற்கு சென்று, மருந்தகங்களின் பட்டியலை பார்வையிடுவதன் மூலம் தமக்கு அருகிலுள்ள மருந்தகத்தின் தொலைபேசிக்கு,  WhatsApp, Viber, Imo ஆகியவற்றின் ஊடாக தமது மருந்து பட்டியல் சிட்டைகளை அனுப்பி வைப்பதன் மூலம் அதனை தமது வீட்டிற்கே தருவிக்கலாம் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

24 மணி நேரத்திற்குள் மருந்துகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கட்டணம் 
மருந்துகளின் விலைக்கு மேலதிகமாக, விநியோக சேவைக்கு நியாயமான கட்டணமொன்று அறவிடப்படும்.

இக்கடணத்தை Online மூலமாகவோ, கிடைத்தவுடன் பணம் செலுத்தியும் பெறலாம்.

மேலதிக தகவல்களுக்கு 0720 60 60 60 இற்கு அழைக்கவும்.
(சிங்களம்/ஆங்கில மொழிக்கு 0720 720 720)

இவ்வாறு நோயாளி ஒருவரால் உரிய மருந்தகத்தை தொடர்புற முடியாவிடின், தாம் வசிக்கின்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொலிஸ் பொறுப்பதிகாரி உரிய மருந்தகத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான உதவியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டுள்ளது.

WhatsApp, Viber, imo மூலம் வீட்டிற்கே மருந்து-Get Your Medicine Delivered to Your Doorstep


Add new comment

Or log in with...