தனியார் மருந்தகங்கள், விற்பனை நிலையங்களை உடனடியாக மூடவும்

தனியார் மருந்தகங்கள், விற்பனை நிலையங்களை உடனடியாக மூடவும்-Close All Pharmacies and Groceries

தனியார் மருந்தங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரசாங்க மருந்தகங்களை தவிர, ஏனைய அனைத்து மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள், ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையம் மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன பணித்துள்ளார்.

உணவுப் பொருட்கள், மருந்துகளை வீடுகளுக்கு சென்று  விநியோகிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், முகாமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதன்படி, அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் எந்தவொரு காரணங்களும் இன்றி பொதுமக்கள், வீதிகளிலோ அல்லது தெருக்களிலோ அல்லது வீடுகளை விட்டு வெளியில் நிற்பதற்கு இடம் வழங்கப்படக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை முறையாக பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ் மாஅதிபரினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...