Sunday, March 22, 2020 - 11:29am
எக்காரணத்திற்காகவும் மின் துண்டிக்கப்படமாட்டாது
மின்சாரப் பட்டியல் கட்டணம் மற்றும் நிலுவைகளை செலுத்துவதற்று மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமாக, இதனை அறிவிப்பதாக, மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், எக்காரணம் கொண்டும், மின்துண்டிக்கப்படமாட்டாது எனவும், அது தொடர்பில் மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Add new comment