நாடு முழுவதும் ஊரடங்கை மீறிய 180 பேர் நேற்றும் இன்றும் கைது (UPDATE)

நாடு முழுவதும் ஊரடங்கை மீறிய 180 பேர் நேற்றும் இன்றும் கைது-28 Arrested for Not Following Curfew Rules
(படம்: பாறுக் ஷிஹான்)

- மைதானத்தில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 08 பேர்
- ஊரடங்கின்போது உணவகம் திறந்திருந்தவர்

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (20) பிற்பகல் 6.00 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது முதல், இன்று (21) இரவு 9.00 மணி வரை 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் அந்தந்த பொலிஸ் நிலையத்தின் மூலம், ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களை வெளியில் வர வேண்டாம் என பொலிஸார் அறிவித்து வருவதோடு, ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

உகண பிரதேசத்தில் 09 பேர் கைது; கஞ்சா, ஹெரோயின் மீட்பு
இன்று (21) காலை 11.30 மணியளவில் உகண  பிரதேசத்தில் வீதியில் உலாவிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மூவரிடமிருந்து ஒரு கிராம் கஞ்சா மற்றும் 40 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

18 - 60 வயதுடைய உகண மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

உகண நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை.

பண்டாரகம பொலிஸ் பிரிவு அட்டுளுகமவில் 10 பேர் கைது
இன்று (21) முற்பகல் 10.45 மணியளவில் அட்டுளுகம பிரதேசத்தில் வீதியில் உலாவிய 10 பேர் கைது.

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

தம்புள்ளை பொலிஸ் பிரிவு, புலாகலவில் 09 பேர் கைது
இன்று (21) காலை 9.30 மணியளவில் தம்புள்ளை, புலாகல பிரதேசத்தில், வீதியில் எவ்வித தேவையுமின்றி, 2 முச்சக்கர வண்டிகள், 3 மோட்டார் சைக்கிள்களில சென்ற 09 பேர் அவ்வாகனங்களுடன் கைது.

25 - 50 வயதுக்குட்பட்ட புலாகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்று (21) தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பண்டாவரவளை பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது
இன்று (21) முற்பகல் 9.30 மணியளவில் பண்டாரவளை - வெலிமட வீதியில், லொறியில் பயணித்த நபர் கைது.

55 வயதுடைய புத்தள பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

பண்டாரவளை, மஹஉல்பத்தவில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 08 பேர் கைது
நேற்று (20) இரவு 10.15 மணியளவில், பொரவகல, மஹஉல்பத்த பிரதேசத்தில், மைதானம் ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த 08 பேர் கைது.

கைதானவர்கள் 18 - 56 வயதுக்குட்பட்ட, பண்டாரவளை, ஊவாபரணகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று (21) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை.

வலஸ்முல்லை பொலிஸ் பிரிவில் 04 பேர் கைது
நேற்று (20) இரவு 10.30 மணியளவில் வலஸ்முல்லை நகரில் 02 டிப்பர் வாகனங்களில் சென்ற 4 பேர், வாகனங்களுடன் கைது.

27 - 29 வயதுகளுடையை கரதொட்ட, மோதரவான, மத்துகம, அகுரஸ்ஸை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

நல்லதண்ணி பொலிஸ் பிரிவு சிவனொளிபாதமலை பிரதேசத்தில் 02 பேர் கைது
நேற்று (20) இரவு 11.40 மணியளவில் சிவனொளிபாதமலை வீதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கைது.

36, 47 வயதுடைய, கொலன்னாவ, மஸ்கெலிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று (21) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை.

அம்பாறை பொலிஸ் பிரிவு முவங்கல பிரதசத்தில் ஒருவர் கைது
நேற்று (20) இரவு 8.50 மணியளவில் முவங்கல பிரதேசத்தில் நடமாடிய நபர் கைது.

43 வயதுடைய, முவங்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

ஹப்புத்தளையில் உணவகம் திறந்திருந்தவர் கைது
ஹப்புத்தளை, பதுளை வீதியில் உணவகத்தை திறந்து வைத்திருந்தமை தொடர்பில் ஒருவர் கைது.

35 வயதுடைய ஹல்துமுல்லை, நீட்வுரூட் பிரிவைச் சேர்ந்தவர்.

இன்று (21) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை.

தங்காலை பொலிஸ் பிரிவு விதாரன்தெனிய வீதியில் ஒருவர் கைது
விதாரன்தெனிய வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதான பெலியத்த, அங்குல்மடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இன்று (21) தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை.

கட்டுநாயக்காவில் 02 பேர் கைது
கட்டுநாயக்கா நகரில் வீதியில் நடமாடிய 02 பேர் கைது.

43, 44 வயதுடைய எப்பாவலை, மினுவாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இன்று (21) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை.


Add new comment

Or log in with...