அதிவேக நெடுஞ்சாலைகள் பி.ப. 6.00 மணி வரை திறந்திருக்கும்

அதிவேக நெடுஞ்சாலைகள் பி.ப. 6.00 மணி வரை திறந்திருக்கும்-Expressways Open Till 6pm

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று பி.ப. 6.00 மணி வரை நாட்டிலுள்ள அனைத்து அதிவேக வீதிகளும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் பிற்பகல் 6.00 மணியின் பின்னர் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு அதிவேக வீதிகள் மூடப்படும் என ஏற்கனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

COVID-19 தொடர்பான செய்திகளுக்கு : www.thinakaran.lk/covid-19


Add new comment

Or log in with...