ஏப்ரல் 20 இல் ஆரம்பம்
அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் உள்ளிட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கும் ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை (16) முதல் மார்ச் 29 வரையான இரு வார விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி, இநிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
நாட்டில் கோவிட் -19 நோய் பரவலை தடுக்கும் வகையில், மாணவர்கள் மற்றும் ஏனைய மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு குறித்தான பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
Add new comment