அதிகாலை 4 மணியுடன் கட்டுநாயக்க நுழையும் விமானங்கள் இடைநிறுத்தம் | தினகரன்


அதிகாலை 4 மணியுடன் கட்டுநாயக்க நுழையும் விமானங்கள் இடைநிறுத்தம்

இன்று (19) அதிகாலை 4.00 மணி முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் விமானங்கள் வருகை தருவது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL. 198 இலக்கமுடைய விமானமே இந்தியாவின் புது டில்லியிலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானமாகும்.

குறித்த விமானத்தில் 77 பயணிகள் வருகை தந்துள்ளனர். இப்பயணிகளில் அதிகளவானோர்  இந்தியாவின் தம்பதிவ சென்ற யாத்திரிகர்கள் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டிற்கு உள்நுழைவது தொடர்பான  அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை, இங்கிருந்து  புறப்படுவது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் எரிபொருள் தேவைக்காக மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...