கல்வியியற் கல்லூரிகளுக்கு மார்ச் 29 வரை விடுமுறை

கல்வியியற் கல்லூரிகளுக்கு மார்ச் 29 வரை விடுமுறை-National College of Education Closed until March 29

அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கும் இரு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மார்ச் 16 முதல் மார்ச் 29 வரை இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்நிறுவனங்கள் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இக்காலப் பகுதியில், சனநெரிசல் காணப்படும் இடங்களை முடிந்தளவு தவிர்க்குமாறும், மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகம் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து முழு கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...