மறு அறிவித்தல் வரை முன்பள்ளிகளுக்கு பூட்டு | தினகரன்

மறு அறிவித்தல் வரை முன்பள்ளிகளுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் காரணமாக இன்று (13) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கு அமைய, முன்பள்ளி மாணவர்களின் சுகாதார நலனை கவனத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து மாகாணச் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, முன்பள்ளி ஆரம்பிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...