அனைத்து பல்கலைக்கழகங்களும் நாளை (14) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இன்று (13) முதல் அனைத்து அரச பாடசாலைகளையும் மூட அரசாங்கம் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கத்தோலிக்க பாடசாலைள், தனியார் வகுப்புகளை ஏப்ரல் 20 வரை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து பௌத்த தர்ம பாடசாலைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment