HUTCH அறிமுகப்படுத்தும் மும்மொழியிலான சுய பேணல் app

HUTCH அறிமுகப்படுத்தும் மும்மொழியிலான சுய பேணல் app-HUTCH Introduces First Trilingual Self-Care App

தங்குதடையின்றிய டிஜிட்டல் அனுபவத்திற்கான உத்தரவாதம்

நாடு தழுவிய 4G வலையமைப்பு மற்றும் எடிசலாட் கூட்டிணைப்புச் செய்ததைத் தொடர்ந்து, 2 2G/3G வலையமைப்பு HUTCH அறிமுகப்படுத்தும் மும்மொழியிலான சுய பேணல் app-HUTCH Introduces First Trilingual Self-Care Appஆகியவற்றின் முன்னெடுப்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில்,ஹட்ச் இப்போது 078 மற்றும் 072 மொபைல் இலக்க பாவனையாளர்களுக்கு தனது சுய-பேணல் app இனை அறிமுகப்படுத்துவதன் மூலம் உண்மையான டிஜிட்டல் அனுபவத்திற்கு இடமளித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்ற பல்வேறுபெறுமதி அடிப்படையிலான சேவைகளில், தொழில்துறையில் முதன்முதலான மற்றும் ஒரேயொரு மும்மொழியிலான சுய-பேணல் app இனை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது, இது அனைத்து அத்தியாவசிய சேவைகளையும், உற்பத்திகளையும் ஒருங்கிணைந்த app இனூடாக வழங்குவதன் மூலம் தற்போது வழங்கப்படும் 400 இற்கும் மேற்பட்ட சேவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

“இந்த app எங்கள் பாவனையாளர்களுக்கு வழங்கும் முக்கிய பெறுமானங்களாக எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை காணப்படுவதுடன்,அதன் பயன்பாட்டிற்கு தரவு கட்டணங்கள் எதுவும் அறவிடப்படுவதும் கிடையாது. கிடைக்கக்கூடிய சேவைகள் தொடர்பில் பாவனையாளர்களுக்கு தகவல் வழங்கப்படுவதில் எளிமை மற்றும் தரவு பயன்பாடு,கிடைக்கப்பெறும் நிலுவைகள், நிமிடங்கள் மற்றும் பிற சேவைகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கு இந்த app இனை உருவாக்கும் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

HUTCH அறிமுகப்படுத்தும் மும்மொழியிலான சுய பேணல் app-HUTCH Introduces First Trilingual Self-Care Appஇவற்றை விட, பாவனையாளர்கள், அவர்களின் வேலைப்பளுமிக்க கால அட்டவணைகளுக்கு மத்தியில், ஒரு பொத்தானைத் தொடும்போது சேவைகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதே அவர்களின் தேவை என்பதை நாங்கள் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். குறைந்த படிமுறைகள் மற்றும் சீரான சேவையுடன் இந்த app இன் மூலம் அதற்கு உயிர்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹட்ச் சுய-பேணல் app  எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு விருப்பமான ஹட்ச் சேவைகளை சௌகரியத்துடன், வேகமாகமுன்னெடுக்க வழிவகுக்கும்,” என்று  Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd நிறுவனத்தின்தரவு, பெறுமதி சேர் சேவைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் உதவிப் பொது முகாமையாளரான யாதவ் மதியாபரணம் கருத்து வெளியிட்டார்.

இந்த app  இப்போது Apple App Store மற்றும் Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு கிடைக்கப்பெறுகிறது. இந்த app பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு சரிபார்ப்பு இலக்கத்தை (PIN) சமர்ப்பிப்பதன் மூலம் இரண்டுபடிகள் கொண்ட இலகுவான செயல்முறையுடன் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம்.

 

Add new comment

Or log in with...