நாடு திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர்

நாடு திரும்பும் மாணவர்கள், ஆசிரியர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர்-14 Days Quarantine Period is Mandatory for Students-Teachers Coming From Corona Affected Countries

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சீனா, கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள கல்வி சார்ந்த மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு வார (14 நாள்) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சு இன்று (06) விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்குமாறு அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகெங்கிலுதுளடள 70இற்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் நோய் (COVID19) தொடர்பிலான தகவல்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குறித்த நாடுகளிலிருந்து வருவோரை 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சினால், கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...