பயணியுடன் வரும் ஒருவருக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி | தினகரன்

பயணியுடன் வரும் ஒருவருக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி

பயணியுடன் வரும் ஒருவருக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி-One Visitor Allowed with a Passenger-Katunayake Airport

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு, பயணிகளை வழியனுப்ப வருவோருக்கும் இன்று (06) முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஆயினும், ஒரு பயணியுடன் ஒருவருக்கு மாத்திரம் விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் வெளிவரும் முனையங்கள் உள்ளிட்ட மண்டபங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 300 நுழைவுச்சீட்டை கொள்வனவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஜனவரி 28ஆம் திகதி முதல், பயணிகளைத் தவிர ஏனையோர் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...