சென்.அந்தனிஸ் பாடசாலை கவனிப்பாரற்று கிடப்பது கவலையளிக்கிறது | தினகரன்


சென்.அந்தனிஸ் பாடசாலை கவனிப்பாரற்று கிடப்பது கவலையளிக்கிறது

நுவரெலியா நகருக்கு மிக அருகாமையில் உயர்தரம் வரை வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையாக அந்தனிஸ் பாடசாலை இயங்கியபோதும் அது பெருமளவானவர்களின் கவனத்தைப் பெறாமல் இருப்பது ஆச்சரியமே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட மீப்பிலிமான சென்.அந்தனிஸ் பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அதனை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் நுவரெலியா பிரதேசசபை உறுப்பினர் ஜே.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர் விஷ்ணுவர்தன், உப தலைவர் ஓ.எஸ்.மாணிக்கம், மாவட்ட தலைவர் குலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

மலையகம் என்றால் அது நுவரெலியாவையே குறிப்பதாகவும் நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள பாடசாலைகளில் அனுமதி பெறவேண்டும் என்ற எண்ணப்பாடு நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே நிலவுகின்றது.

ஆனால், நுவரெலியா மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக நுவரெலியா நகரை அண்டிய சென். அந்தனிஸ் பாடசாலை போன்று யாரும் கவனிப்பாரற்ற பாடசாலைகளும் இங்கே இருப்பது கவலைக்குரியது. எனினும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க போன்ற கஷ்டத்திலும் சாதித்த ஆளுமைகளை மலையக மாணவர்கள் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்.

இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் அரச நிர்வாக அதிகாரிகளாக, வைத்தியர்களாக, அதிபர்களாக, ஆசிரியர்களாக பணியாற்றுகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. எனினும் கவனிப்பாரற்று கிடப்பது கவலை அளிக்கிறது.

நுரெலியாவில் நிலத்தின் பெறுமதி அதிகம் என்கின்ற வகையில் பாடசாலை காணியைப் பாதுகாத்துக் கொள்வதே மிக முக்கியமாக இருக்கிறது. என்னதான் கஷ்டப்பிரதேசம் என்றாலும் வாசிப்பு ஒரு மனிதனை மேலே உயர்த்தும்.அத்துடன் பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...