டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் | தினகரன்


டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்

டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்- என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பின்னர் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் நடந்த வன்முறையானது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். டெல்லியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை தொடர்பாக உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? துணை இராணுவத்தை முன்கூட்டியே அழைக்காதது ஏன்?

இந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும்.


Add new comment

Or log in with...