கொரோனா; தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தயார் நிலையில் | தினகரன்


கொரோனா; தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தயார் நிலையில்

கொரோனா வைரஸ் தென்கொரியாவில் பரவி வரும் நிலையில் அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர் தொடர்பில் அங்குள்ள இலங்கைத் தூதரகம் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  

தற்போது தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற போதிலும், இதில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக  கவனம் செலுத்தி வருவதோடு, தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் நிலையில் 24 மணிநேரமும் தூதரகத்துடன் தொடர்புகொள்ள 03 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  

0082-2-735-2966
0082-2-735-2967
0082-2-794-2968

குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களது பிரச்சினைகளை தூதரகத்திற்கு தெரிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


Add new comment

Or log in with...