போக்குவரத்து நெரிசலை குறைக்க பொலிஸாருடன் இராணுவ பொலிஸார்

போக்குவரத்து நெரிசலை குறைக்க பொலிஸாருடன் இராணுவ பொலிஸார்-Military Police To Assist City Traffic Police During Peak Hours

- கொழும்பு நகரில் கடமை
- மு.ப. 6.00 - 10.00; பி.ப. 4.00 - 7.00

கொழும்பு நகரத்தினுள் வாகன நெரிசலை குறைப்பதற்காக பொலிஸாருக்கு உதவும் வகையில், இராணுவ பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும்  இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிக்காட்டலின் கீழ் இன்று (24) காலை இந்நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நகர வீதிகளில் ஏற்படும் பாரிய வாகன நெரிசல்களை குறைக்கும் நோக்கத்துடன் இராணுவ பொலிஸார் தினமும் காலை 6.00 - 10.00 வரையும் மாலை 4.00 - 7.00 மணி வரை நகர போக்குவரத்துக்கு கடமைகளுக்காக பொலிஸாருடன் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இலங்கை இராணுவ பொலிஸாருக்குரிய நடமாடும் கார் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் கண்காணிப்பு கடமைகள் நிமித்தம் வீதிகளில் ஈடுபடுத்தபடுமென்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...