உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு | தினகரன்


உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு

உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 26 வரை வி.மறியல் நீடிப்பு-Udayanga Weeratunga Re Remanded Till Feb 26

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு பெப்ரவரி 26ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (17) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மிக் (MiG) விமான கொள்வனவில் இடம்பெற்ற அரசாங்க நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் உதயங்க வீரதுங்க, கடந்த 14 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...