மின்சார விபத்து மரணங்கள் 2019 இல் 103 ஆக அதிகரிப்பு

மின்சார விபத்துகளின் எண்ணிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு 103ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இது கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 89இறப்புகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதென்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதிகமான மின்சார விபத்துகள் தென் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன. இதன்படி 2019ஆம் ஆண்டில் தென்மாகாணத்தில் 30பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.  

இதேவேளை ஒப்பீட்டளவில் மேல் மாகாணத்திலேயே ஆகக்குறைவான மின்சார மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 

கடந்த 2015தொடக்கம் 2019வரையான காலப்பகுதியில் மின்சாரம் தாக்கியதால் தென்மாகாணத்தில் 97பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமென்று ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. 

விளை நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் வனவிலங்குகளை கொல்வதற்காக ஏற்படுத்தப்படும் சட்டவிரோத மின் இணைப்புகள் காரணமாகவே அதிகமான மின்சார மரணங்கள் இடம்பெறுகின்றன என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...