யாசகம் கேட்பதன் விளைவு

இஸ்லாத்தில் எதிர்பார்க்கப்படும் நடுவு நிலை வாழ்க்கை முறையில், யாசகம் கேட்கும் நிலை வருவதை ஒவ்வொருவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உங்களில் ஒருவர் யாசகம் கேட்டுக்கொண்டேயிருப்பாரேயானால்- அவர் தனது முகத்தில் ஒரு துண்டு சதை கூட இல்லாத நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பார். 

(புகாரி-,  முஸ்லிம்) 

எனவே , உழைத்து உணவைத் தேடிக்கொள்ளாது, இரந்து வாழும் சோம்பல் வாழ்வை இஸ்லாம் தடுக்கின்றது. 

# உண்மையான ஏழை யார்? 

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்,  ஓரிரு கவள உணவு, ஓரிரு பேரீத்தம் பழங்கள் ஆகியவற்றைத் திரும்புவதற்கு மக்களுக்கு மத்தியில் சுற்றித் திரிபவன் உண்மையான ஏழையல்ல. உண்மையான ஏழை யாரெனில், தன்னைத் தேவையற்றவனாக ஆக்கும் அளவு செல்வத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார். அவருக்கு ஸதகா கொடுப்பதற்கு அவருடைய தேவைகளை மற்ற வர்கள் அறியவும் மாட்டார்கள். அவர் மக்களிடத்தில் தமது தேவையை கேட்கவும் மாட்டார். இவரே உண்யைமான ஏழையாவார்” (புகாரி-,  முஸ்லிம்) 

எனவே, இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ஏழைகள் எனப்படுவோர்- இனங்காணப்பட்டு உரியமுறையில் செல்வந்தர் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். 

இன்று முஸ்லிம் சமுதாயத்தில், காணப்படும் ஒரு கேவலமான காட்சிதான், வெள்ளிக்கிழமை நாட்களிலும், ரமழான் மாதத்திலும், பிச்சைக்கார வரிசை- கூடிக்கொண்டே வருவதாகும். இந்நிலை மாறி, ஒவ்வொரு முஸ்லிம் ஜமாஅத்தும் திட்டம் வகுத்து, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் பிச்சை கேட்க வருவோர்களை இனங்கண்டு, அவர்களின கஷ்ட நஷ்டங்களைக் கணித்து பொது நிதியிலிருந்து , அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

வறுமை ஏற்படுமிடத்து, அல்லாஹ்விடம் முறையிடும் மக்களை எம்மத்தியில் உருவாக்க வேண்டும். அதற்காக, பள்ளி நிர்வாகங்கள் ஏற்ற ஸதகா ஒழுங்குகளை அமுல் நடாத்த வேண்டும். 

எனவே, நாம் நடுநிலைச் சமுதாயமாக திகழ்வதற்கு அல்லாஹ்வின் திருக்குர்ஆன் போதனையையும் நபி வழியையும் பின்பற்றுவோர்  வாழ்க்கையில் திருப்தியடைபவரேயாகும். இவ்வாறு திருப்தியான வாழ்வு முறையைக் கடைப்பிடிப்பவர்கள் உண்மையில் வெற்றி பெற்றவர்கள் என்பது பின்வரும் ஹதீஸ் மூலம் நன்கு உணர்கின்றோம். 

“ரஸூல் (ஸல்)  அவர்கள் கூறியதாக,  அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். யார் இஸ்லாத்தை ஏற்று (வாழ்க்கைக்குப்) போதுமான அளவு ரிஸ்கு கொடுக்கப்பட்டு அல்லாஹ் தனக்குக் கொடுத்ததைப் பொருந்திக்கொள்கிறாரோ அவர் வெற்றியடைந்துவிட்டார்.(முஸ்லிம்)   

கலாபூஷணம்
எம்.வை.எம். மீஆத்
ஹெம்மாத்தகம


Add new comment

Or log in with...