விளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு | தினகரன்

விளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு

விளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு-Opt-Out Option for SMS Promotion-TRC

கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள், தமக்கு தேவையற்றதாக கருதும் அனைத்து குறுஞ்செய்தி (SMS) விளம்பர சேவைகளிலிருந்தும் விடுபடுபடுவதற்கான (Unsubscribe) தெரிவை (Option) வழங்குமாறு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC), அனைத்து கையடக்க தொலைபேசி வலையமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

விளம்பர SMSகளிலிருந்து விடுபடும் தெரிவை வழங்குமாறு TRC உத்தரவு-Opt-Out Option for SMS Promotion-TRC

பாவனையாளர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறான தேவையற்ற குறுஞ்செய்திகளை பெறுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என, ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இவ்வாறு சேவைகளிலிருந்து விடுபடும் தெரிவுக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...