ரஞ்சன் ராமநாயக்க அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை | தினகரன்


ரஞ்சன் ராமநாயக்க அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை

ரஞ்சன் ராமநாயக்க அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலை-Ranjana Ramanayake to the Government Analyst Department

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க அரசாங்க இராசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரால் பதிவு செய்யப்பட்ட, தொலைபேசி அழைப்பு ஒலிப்பதிவுகள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, அவரது குரல் மாதிரியை பெறுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கமைய அவர் தற்போது அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 15ஆம் திகதி குறித்த உத்தரவை வழங்கிய நுகேகொட நீதவான், ஜனவரி 23ஆம் திகதி அவரை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார் ஆயினும் அது பின்னர் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகளின் கடமைகளில் தலையிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...