கொரோனா; சந்தேகத்திற்கிடமான 16 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

கொரோனா தொற்றியதாக சந்தேகிக்கும் 16நோயாளர்கள் நேற்று வரை பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தவறான தகவல்கள் காரணமாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனாவில் கல்வி பயின்ற இலங்கை மாணவி தொடர்பில் பரபரப்பு ஏற்பட்டதாக தொற்று நோய் பிரிவு பிரதானி டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 125பேர் அனுமதிக்கப்பட்டதோடு நோற்று 135பேர் அனுமதிக்கப்பட்டார்கள்.வேறு நோய்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டோர் வெளியேறிவிடுவதாக கூறிய அவர், கொரோனா தொற்றி குணமடைந்த சீனப் பெண் தொடர்பில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தி அறிக்கைகள் பெற்று வருவதாகவும் கூறினார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்,

சந்தேகத்திற்கிடமான 16பேரில் மூவர் கொழும்பிலும் நால்வர் கண்டியிலும் தலா இருவர் கராபிட்டிய, நீர்கொழும்பு, வைத்தியசாலைகளிலும் ராகம, கம்பஹ, பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல் வைத்தியசாலைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெறுகின்றனர்.

தியதலாவ முகமில் சிகிச்சை பெற்ற மாணவி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தவறான தகவலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சீனாவில் கற்ற மொணராகலை பகுதி மாணவியே இவ்வாறு அனுமிக்கப்பட்டிருந்தார்.

சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க கூறுகையில்,சந்தேகத்திற்கிட மானவர்களின் இரத்த மாதிரிகள் மாத்திரமே பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...