சீருடை வவுச்சருக்கான காலஎல்லை பெப். 28 வரை நீடிப்பு

பாடசாலை சீருடை மற்றும் காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட குறித்த வவுச்சர்களின் காலாவதியாகும் திகதி ஜனவரி 31ஆம் திகதியென குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆயினும் தற்போது இதன் காலஎல்லையை எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   


Add new comment

Or log in with...