அனைத்து மருத்துவ சேவை ஊழியர்களுக்கும் முகக் கவசம் கட்டாயம்

விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவர்கள் குழு, மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை அதிகாரிகள் நிர்வாகத்தினர் ஆகியோர் முகக் கவசம் அணிவதுடன், கையுறைகள் மற்றும் டாக்டர்கள் தலையை மூடும் வகையிலான கவசத்தை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கான ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிப்பட்டுள்ளது.  

அத்துடன் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் அடங்கிய நான்கு பக்கங்களைக் கொண்ட விசேட ஆலோசனைக் கோவை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பிரதேசங்கள் மற்றும் தங்கியிருக்கும் ஹோட்டல்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளுக்காக பொது சுகாதார சேவை பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக. சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்   


Add new comment

Or log in with...