சுவிஸ் ஊழியரின் மொபைலை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க உத்தரவு

சுவிஸ் ஊழியரின் மொபைலை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க உத்தரவு-Court Order to Submit Ganiya's Mobile to Govt Analyst

முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவு

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்த, சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸின் கையடக்க தொலைபேசியை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி நீதிமன்ற உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, தற்போது அது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணை தொடர்பில் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நாளைமறுதினம் (23) சிஐடியில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியதாக கடந்த டிசம்பர் 16 இல் கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பெனிஸ்டர் டிசம்பர் 30இல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் ஊழியரின் மொபைலை பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க உத்தரவு

கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்த, சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸின் கையடக்க தொலைபேசியை அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி நீதிமன்ற உத்தரவுக்கமைய, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, தற்போது அது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

அத்துடன் இவ்வழக்கு விசாரணை தொடர்பில் முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நாளைமறுதினம் (23) சிஐடியில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி 07 முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவரால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் மூலம் இலங்கை பொலிஸ் சேவைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிற்கு நீதிமன்றத்தினால் கடந்த ஜனவரி 08ஆம் திகதி வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...