கதைகளின் மொத்த கூட்டு

அ. முத்துலிங்கம் 

அ. முத்துலிங்கம் கதைகளின் உற்பத்தி. யாழ்ப்பாணத்தில் பிறந்து கதைகளின் உயர்வினையும், மானிடர்களின் பல்தரப்பட்ட போக்கினையும் தன் எழுத்துக்களில் வடித்தவர். 1964ல் வெளியான 'அக்கா' கதை மூலம் தினகரன் சிறுகதை பரிசுப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று தனக்கான தளத்தினை உருவாக்கிக் கொண்டார். நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் 1995ல் செயற்படத் தொடங்கிய அ. முத்துலிங்கம் சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என இலக்கியப் பணியின் வேகத்தினை அதிகரித்தார். உண்மை கலந்த நாட்குறிப்புகள் எனும் புதினத்தையும். அக்கா, திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி, மகாராஜாவின் ரயில் வண்டி, அ. முத்துலிங்கம் கதைகள், ஒலிப்புத்தகம், அமெரிக்கக்காரி, குதிரைக்காரன், கொழுத்தோடு பிடிப்பேன் போன்ற இன்னோரன்னப் பல சிறுகதைத் தொகுதிகளையும். அங்கே இப்ப என்ன நேரம்?, கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது, வியத்தலும் இலமே, அமெரிக்க உளவாளி, ஒன்றுக்கும் உதவாதவன் போன்ற கட்டுரைத் தொகுப்புக்களையும் தமிழ் உலகிற்குத் தந்த  

அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் மிக விசித்திரமானது. ஒரு படைப்பு வெறுமனே அதன் உள்ளடக்கத்தில் வைத்து பார்க்கப்படுவதில்லை. அப்படைப்பின் மூலகர்த்தா, அவர் கொண்டிருக்கின்ற கொள்கை, கோட்பாட்டுச் சூழல், பின்புலம் போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டே ஒரு இலக்கியப் பிரதி நோக்கப்டுகிறது. காத்திரமிக்க படைப்பு வாசக மனதில் நிலையான பொக்கிஷமாக இருக்கின்ற போது அந்தப் படைப்போடு சேர்த்து அந்தப் படைப்பாளனும் வாழ்த்தப்படுகிறான்.

இதுதான் அப்படைப்பிற்கு கிடைக்கின்ற திருப்தி எனலாம்.  

அ.முத்துலிங்கத்தின் படைப்புலகத்தினைப் பொறுத்தவரை அவரின் கதைகள் காலத்தின் மனிதர்களை உணர்த்தி நிற்கின்ற, வாழ்வியலை எள்ளி நகையாடுகின்ற வாசனையின் பிரபதிபலிப்பாகும்.  

தனது படைப்புகளின் மூலம் ஏராளமான விருதுகளை தன் வசப்படுத்தியவர் அ. முத்துலிங்கம். எவ்வாறு ஒரு கதை சொல்லியை அடையாளம் காணலாம், அவனுடைய எழுத்துக்களை கதைகளின் பக்கம் எவ்வாறு உள்வாங்கலாம், அவனுடைய கதைகளின் அரசியலினை எப்படி புரிந்து கொள்வது போன்ற ஏராளமான கேள்விகள் ஒரு வாசகனை உருவாக்குகின்றன.

நிலவிலிருந்தும், காற்றிலிருந்தும், தான் நுகர்கின்ற எல்லாப் பொருட்களின் மீதும் ஒரு கதை சொல்லி கவனம் பெறத் துவங்குகிறான். அவைகளை கதைகளாக பிரகடனப்படுத்துகிறான். கதைகளின் பிறப்பு நிகழ்ந்ததன் பின்னர் வாசகனின் பார்வையும், உரையாடலும் ஒரு கதை சொல்லிக்கான அங்கீகார இருப்பிடத்தினை வழங்குகின்றன. அவ்வகை இருப்பின் சொந்தக்காரனே


Add new comment

Or log in with...